கரூர்: சின்னதாராபுரம் அகிலாண்டேஸ்வரி, முனி முக்தீஸ்வரா சுவாமி கோவிலில், மாசி மக தேரோட்ட விழா நடந்தது. கடந்த, பிப்., 19ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 27ல், சுவாமி திருக்கல்யாண உற்சவம், 28ல் யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்றனர். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.