பதிவு செய்த நாள்
03
மார்
2018
01:03
பொன்னேரி:சாய் பிருந்தாவன் கோவிலில், நாளை மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.பொன்னேரி அடுத்த பரிக்கப்பட்டு, எம்.கே.பி.நகரில், சாய் பிருந்தாவன் கோவில் உள்ளது. பரிவார மூர்த்திகளாக விநாயகர், ராமர், சீதா, லட்சுமணன், சரஸ்வதி, தத்தாத்ரேயர், ஆஞ்ச நேயருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. சாய் பிருந்தாவன் கோவில் கும்பாபிஷேகம், நாளை காலை, 9:00 மணிக்கு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, நேற்று காலை, 9:00 மணிக்கு மஹா கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம் நடத்தப்பட்டன.இன்று, காலை, 8:45 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற உள்ளன. நாளை காலை, 7:00 மணிக்கு நான்காம் கால யாகபூஜை முடிந்து, காலை, 9:45 மணிக்கு, விமான கோபுர கும்பாபிஷேகம், காலை, 10:00 மணிக்கு, சாய் பிருந்தாவன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.