பதிவு செய்த நாள்
05
மார்
2018
01:03
ஓசூர்: ஓசூர் அருகே நடந்த விநாயகர் மற்றும் முனீஸ்வரர் கோவில் கும்பாபி?ஷக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஓசூர் அடுத்த திப்பாளம் அருகே உள்ள வர்மன் ஈன் லே அவுட் பகுதியில், கற்பக விநாயகர் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இங்கு, பெருமாள், துர்க்கையம்மன், சாய்பாபா, முருகர் போன்ற தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இக்கோவில் கும்பாபி?ஷக விழா, நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை, 7:00 மணிக்கு, நாடி சந்தனம், இரண்டாம் கால யாகம், மகா அபி?ஷகம், 9:30 மணிக்கு கலச புறப்பாடு, 10:00 மணிக்கு கும்பாபி?ஷகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சூளகிரி அடுத்த தேவர்குட்டப்பள்ளி பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் புதிதாக கட்டப்பட்டுள்ள முனீஸ்வரர் கோவில் கும்பாபி?ஷக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு கலச பூஜை, கணபதி பூஜை, வாஸ்து பூஜை, யாகசாலை பிரவேசம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, கணபதி ஹோமம், காலை, 6:00 மணிக்கு கும்பாபி?ஷகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.