கோயில்கள் சிலவற்றில், செப்புத் தகடுகளால் கூரை வேய்ந்திருப்ப தாத்பர்யம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2018 05:03
தென்னங்கீற்றினால் ஆன கூரையை வருடத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டியிருக்கும். ஓட்டுக் கூரையே ஆனாலும், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது அதைப் பிரித்து தூசி தட்டி மீண்டும் கூரை அமைக்க வேண்டியிருக்கும். செப்புத் தகடுகளால் ஆன கூரை நீண்ட நாள்கள் நீடிக்கும். பராமரிப்புச் செலவும் குறையும். கூரையும் லேசாக இருப்பதால் தேய்மானம் குறைவு. மழை வெயில், காற்று ஆகியவற்றின் தாக்கத்தால் தென்னங் கீற்று மற்றும் ஓட்டுக் கூரைகள் எளிதில் பாதிப்புறும். ஆனால் செப்புத் தகடு தாக்குப் பிடிக்கும். கூரையின அதிக ஆயுள், பொருளாதாரம் என்ற நோக்கில் செப்பு சிறப்பு. செல்வச் செழிப்பு மிகுதியாக இருந்தால், தங்கத் தகடுகூடப் பயன்படுத்தலாம். தற்போது தங்கமுலாம் பூசிய கோபுரங்களைக் காண முடிகிறதே. கூரை முழுவதும் தங்க முலாம் பூசும் காலமும் வரும்! கூரை வேண்டாம் என்று நினைக்கும் தெய்வங்களும் உண்டு. கேரளத்தில் கூரை இல்லாத சிறு கோயில்கள் ஏராளம். காவல் தெய்வங்களின் கோயில்களில் கூரைக்கு முன்னுரிமை இருக்காது.