மொடக்குறிச்சி: அரச்சலூரை அடுத்த, பழையக்கோட்டை, குமாரபாளையத்தில், வாணிய வைசியர் குலத்தின், மகரிஷி கோத்திரம் குலத்தாரின், சக்தி விநாயகர், அடைக்கலம் காத்த அம்மன், மதுரை வீரன் கோவிலில் திருப்பணி நடந்தது. இதையடுத்து கும்பாபிஷேக பணி தொடங்கியது. நேற்று காலை சுவாமிகளுக்கு மஹா கும்பாபி?ஷகம் நடந்தது. சிவஸ்ரீ சுரேஷ் சிவாச்சாரியார் கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.