திண்டிவனம்:தீவனுார் விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சங்காபிஷேகம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.திண்டிவனம்-செஞ்சி ரோட்டிலுள்ள தீவனுார் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில், மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் திருவிளக்கு பூஜை, மகா கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன் பொய்யாமொழி விநாயகரின் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.