பதிவு செய்த நாள்
21
மார்
2018
01:03
மாமல்லபுரம்: ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திர உற்சவம், இன்று துவங்கு கிறது. 29 வரை, தினமும் மாலை துவங்கி இரவு வரை, பல உற்சவங்கள் நடைபெறும். 10ம் நாள் உற்சவமாக, 30ம் தேதி காலை, திருமஞ்சனம், ஸ்ரீசுக்த ஹோமம், மாலை திருக்கல்யாணம், இரவு பள்ளியறை உற்சவம் நடைபெற உள்ளது.
பார்வேட்டை நடத்த பக்தர்கள் வலியுறுத்தல்
சாலவான்குப்பம்: சாலவான்குப்பத்தில் தடைபட்டுள்ள ஸ்தலசயன பெருமாள் பார் வேட்டையை, மீண்டும் துவக்க, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். மாமல்லபுரம் அடுத்த, பட்டிபுலம் ஊராட்சி, சாலவான்குப்பத்தில், மாமல்ல புரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலுக்குரிய, நிலம் உள்ளது. இங்கு, சுவாமி ஊஞ்சல் சேவை மண்டபம் அமைந்துள்ளது. நீண்டகாலம் முன், சுவாமி சேவை மண்டபத்தில் எழுந்தருளி, பார் வேட்டை உற்சவம் நடந்துள்ளது. நாளடைவில், உற்சவம் தடைபட்ட நிலையில், நிலம் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகிறது. வளாகத்தில் முட்புதர் சூழ்ந்து, இப்பகுதியினர் திறந்தவெளி கழிப்பறையாக சீரழிக்கின்றனர். இதன் ஆன்மிக சிறப்பு கருதி, பராமரித்து மீண்டும் பார்வேட்டை துவக்க, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.