பதிவு செய்த நாள்
21
மார்
2018
01:03
காஞ்சிபுரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து, திருமலை, திருப்பதிக்கு பாத யாத்திரையாக சென்ற, பஜனை குழுவினர் காஞ்சிபுரம் வந்தனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பிடாரிப்பட்டு மஹாலட்சுமி சமேத லட்சுமி நாராயண பெருமாள் பஜனை குழுவினர், திருமலை திருப்பதிக்கு மாலை அணிந்து, முதலாம் ஆண்டு திருமலை பாதயாத்திரையை, மார்ச் 14ல் துவக்கினர். விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட திருப்பதி வெங்கடேசப் பெருமாள் சிலை அமைக்கப்பட்ட வாகனத்துடன், மைலம், திண்டிவனம், தெள்ளார், வந்தவாசி வழியாக பஜனை பாடல்களை பாடியபடி, பாதயாத்திரையாக காஞ்சிபுரம் வந்தனர். காஞ்சிபுரத்தில் பக்தர்கள் வெங்கடேசபெருமாளை வழிபாடு செய்தனர். பின், திருமால்பூர், அரக்கோணம் வழியாக பஜனை குழுவினர், திருமலை திருப்பதிக்கு செல்கின்றனர்.