Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குன்றக்குடி சண்முகநாத பெருமான் ... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரநாதர் பங்குனி உத்திர விழா காஞ்சியில் கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2018
01:03

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழா, நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமியும் அம்பாளும், சப்பரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவிலின் பங்குனி உத்திர திருவிழா, ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு, நேற்று காலை, 5:30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சப்பரத்தில், அம்பாளுடன் எழுந்தருளிய சுவாமி, நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு, சிம்ம வாகனத்தில் சுவாமியும், கிளி வாகனத்தில் அம்பாளும் புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, ஞாயிறு அன்று, வெள்ளி அதிகார நந்தி சேவையும், திங்கள் கிழமை அறுபத்தி மூவர் ஊர்வலமும், மறுநாள் தேர் திருவிழாவும் சிறப்பாக நடைபெற உள்ளது. வரும், 31ல் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இந்நிலையில், திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக, தற்காலிக கழிப்பிடங்கள் ஏற்பாடு செய்யப்படும் என, ஆலோசனை கூட்டத்தில் கூறப்பட்டது. ஆனால், செய்யப்படவில்லை. மேலும், மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், நிலமங்கை தாயாருக்கு, பங்குனி உத்திர உற்சவம், நேற்று துவங்கியது. அதுபோல, செங்கல்பட்டு வ.உ.சி., தெருவில், காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலிலும், பிரம்மோற்சவ விழா, நேற்று துவங்கியது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041 வது  சதய விழா நேற்று ... மேலும்
 
temple news
கோவை: நவராத்திரியை ஒட்டி, கோவையிலுள்ள பெங்காளி அசோசியேஷன் சார்பில், 25ம் ஆண்டு துர்கா பூஜை ராம் நகர் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: மலேசிய முருகன் கோவில் சர்வதேச நாட்டிய விழாவில் புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்று பரத திறமையை ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் தங்கரதத்தில் ரூ.56 லட்சம் மதிப்பில் 22 கிலோ எடையில் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: தசரா விழாவின் கடைசி நாளான நேற்று, மகிசாசூரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar