செஞ்சி :சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் வரும் 5ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. செஞ்சியை அடுத்த சிங்கவரத்தில் பழமையான ரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறப்பு நடந்து வருகிறது. சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியிலும், ரங்கநாதரை தரிசனம் செய்யவும் செஞ்சி, புதுச்சேரி, திண்டிவனம், விழுப்புரம் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி வரும் 5ம் தேதி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு 4ம் தேதி இரவு ரங்கநாதருக்கு தைல காப்பு நடக்கிறது. மறுநாள் (5ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு சொர்க்க வாசல் வழியாக வந்து ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.