பதிவு செய்த நாள்
26
மார்
2018
01:03
கோத்தகிரி: கோத்தகிரி பேட்லாடா மாரியம்மன் திருவிழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.கடந்த, 19ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 21ல் பகல், 12:00 மணிக்கு, பத்ரகாளியம்மன் திருவீதி உலா, இரவு, 12:00 மணிக்கு, கத்திகை பூஜை நடந்தது. 22ல் காலை, 9:00 மணிமுதல், 2:00 மணிவரை, ஸ்ரீ தண்டு மாரியம்மன் வெள்ளி தேரில் திருவீதி உலா நடந்தது. இதன் பின், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், பஜனை, ஆன்மிக சொற்பொழிவு மற்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது.