குளித்தலை மாரியம்மன் கோவில் திருவிழா: பால் குடம் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2018 01:03
குளித்தலை: மாரியம்மன் கோவில் திருவிழாவில், 13 கிராம பொது மக்கள் தீர்த்த குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். குளித்தலை அடுத்த பாப்பக்காப்பட்டி பஞ்., பொது மகா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, 13 கிராம பொதுமக்கள், குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து நேற்று பால் குடம், தீர்த்தக் குடம் எடுத்தனர். இதில், 15 கி.மீ., தூரம் பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். இதில், குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை, 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இரவு சுவாமிக்கு கரகம் பாலித்தல் நடந்தது. இன்று கோவில் திருவிழா நடக்கிறது.