கள்ளக்குறிச்சி: நீலமங்கலம் மாரியம்மன் கோவிலில் கல் கோபுரம் திருப்பணி பூர்த்தி விழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. நுாற்றாண்டை கடந்த இக்கோவிலை கற்களால் கட்டுவதற்கு ஊர்மக்கள் முடிவு செய்தனர். அதன்படி மாரியம்மனுக்கு பாலஸ்தாபனம் செய்து புனரமைப்பு திருப்பணிகள் துவங்கியது. கருவறை கல் மண்டபத்தால் கட்டப்பட்டு நிறைவாகி உள்ளது. கோவில் கல் கோபுரம் 27 அடி உயரம், 9 அடி அகலத்திற்கு அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டு பூர்த்தி விழா நடந்தது. துறையூர் வேணுகோபால் ஸ்தபதி கல் கோபுர பணிகளை மேற்கொண்டார். விநாயகர் வழிபாடு, புண்ணியாவஜனம் ஆகியவற்றுக்குப்பின் மாரியம்மனுக்கு பூஜைகள் நடத்தினர். பெண்கள் தீபமேற்றி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்காக பிரார்த்தனை செய்தனர்.