பதிவு செய்த நாள்
27
மார்
2018
02:03
நரசிங்கபுரம்: செல்லியம்பாளையம் மாரியம்மன் கோவில், கும்பாபி?ஷக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஆத்தூர் அருகே, செல்லியம்பாளையம் கிராமத்தில் மாரியம்மன், விநாயகர், மகா முனியப்பன் கோவில்கள் உள்ளன. 14 ஆண்டுகளுக்கு பிறகு, 22 அடி உயரத்துக்கு புதிதாக, கோவில் கோபுரம் கட்டப்பட்டு நேற்று, கும்பாபி?ஷக விழா நடந்தது. கடந்த, 19ல், காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்று விழா நடந்தது. நேற்று முன்தினம், பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம், யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 9:20 மணியளவில், ஞானஸ்கந்த சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர், மாரியம்மன், விநாயகர் கோபுர கலசத்தின் மீது, புனித நீர் ஊற்றி கும்பாபி?ஷகம் செய்தனர். தொடர்ந்து, மாரியம்மன், மகா முனியப்பன், விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.