கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் 7ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. உத்தரகோசசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில் அருள் பாலிப்பார். ஆண்டுக்கு ஓரு முறை ஆருத்ரா தரிசனத்தன்று சிலையில் சந்தனம் களையப்பட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும். நடப்பாண்டில் ஆருத்ரா தரிசசனம் விழா டிச., 30ல் தொடங்கியது. வரும் 7ம் தேதி காலை 10.30 மணிக்கு சந்தனம் களைதல் நிகழ்ச்சியும், 11.30 மணிக்கு மகா அபிஷேக நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு தீபாராதனையும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் மகேந்திரன் தலைமையில் நிர்வாக அலுவலர் சாமிநாததுரை மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.