பதிவு செய்த நாள்
28
மார்
2018
01:03
பல்லடம்: பல்லடத்தை அடுத்த கே.என்., புரத்தில், மாரியம்மன் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெற்றது.பல்லடத்தை அடுத்த கே.என்., புரம் லட்சுமி மில்ஸ் பகுதியில் செல்வ விநாயகர் கோவிலில், மாரியம்மன் பொங்கல் பூச்சாட்டு விழா, கடந்த, 20ல், பூச்சாட்டுடன் துவங்கியது. தொடர்ந்து, விநாயகர் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. நேற்று முன்தினம், கணபதி ஹோமத்துடன், மாரியம்மன் பச்சை குடிசையில் எழுந்தருளினார். நேற்றிரவு, 9.00 மணிக்கு, அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. காமராஜர் காலனி இன்ப விநாயகர் கோவிலில் இருந்து, தீர்த்த கலசங்கள் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து, விநாயகர், மாரியம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்றன. இன்று, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில், அம்மன் விசர்ஜனம் நடைபெறவுள்ளது.