திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, திருவள்ளூர் மாவட்ட உதவி ஆணையர் ஜான்சிராணி முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டன. இதில், 51 லட்சத்து, 94 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 446 கிராம் தங்கம், 2304 கிராம் வெள்ளி இருந்தன. மேலும், அன்னதான உண்டியலில் 78 ஆயிரத்து, 780 ரூபாயை பக்தர்கள் செலுத்தி உள்ளனர். இது ௨௨ நாட்களில் செலுத்திய காணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.