அங்காளம்மன் கோவில் உண்டியல் திறப்பு ரூ.41.87 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2018 01:03
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் 41 லட்சத்து 87 ஆயிரத்தி 135 ரூபாய் உண்டியல் பணம் வசூல் ஆனது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பங்குனி மாத அமாவாசை முடிந்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டன.இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர்கள் பிரகாஷ், ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் கோவில் வளாகத்தில் பணம் எண்ணும் பணி நடந்தது. உண்டியலில் 41 லட்சத்து 87 ஆயிரத்தி 135 ரூபாய் பணமும், 252 கிராம் தங்க நகைள், 705 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.