பதிவு செய்த நாள்
28
மார்
2018
01:03
அந்தியூர்: அந்தியூரில் பிரசித்தி பெற்ற, பத்ர காளியம்மன் கோவில் குண்டம் தேர்திருவிழா, கடந்த, 15ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இன்று கொடியேற்றம் நடக்கிறது. இதை தொடர்ந்து தினமும், ஒவ்வொரு வாகனத்தில், அம்மன் வீதி உலா செல்லும். ஏப்.,4ல் குண்டம் விழா நடக்கிறது. இதில் அந்தியூர், தவிட்டுப்பாளையம், பருவாச்சி, செம்புளிச்சாம்பாளையம், பவானி, ஈரோடு, பர்கூர்மலை என பல்வேறு பகுதி மக்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். ஏப்.,6ல் தேரோட்டம் நடக்கிறது. ஏப்.,9ல் தேர் நிலை அடைகிறது. 10ல் பரிவேட்டை, 11ல் வசந்தோற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.