பதிவு செய்த நாள்
30
மார்
2018
03:03
காஞ்சிபுரம் : குண்ணங்குளத்தூர் கும்பேஸ்வரர் கோவிலில், இன்று 30ல், பங்குனி உத்திர திருக் கல்யாண விழா விமரிசையாக நடைபெறுகிறது.
மதுராந்தகம் வட்டம், திருமலை வையாவூர் அருகில் உள்ள குண்ணங்குளத்தூரில், மங்களா ம்பிகை உடனுறை கும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், பங்குனி மாதத்தில், பங்குனி உத்திர திருக்கல்யாண ரிஷப வாகன சேவை நடப்பது வழக்கம்.அந்த வகையில், 66வது ஆண்டு, பங்குனி உத்திர திருக்கல்யாண ரிஷப வாகன சேவை, இன்று 30ல், இரவு, 8:00 மணிக்கு நடைபெறுகிறது.விழாவையொட்டி, இன்று (மார்ச் 30)ல் காலை, 10:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரமும், மாலை, 4:00 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும், அதை தொடர்ந்து, மேளக்கச்சேரி, அரிபந்த சேவை, சிவ பஜனை யும் நடைபெறுகிறது. இரவு, 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், அன்னதானம், பரத நாட்டிய நிகழ்ச்சி, வாண வேடிக்கை மற்றும் கரகாட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து, ரிஷபம், மூஷிகம், மயில் வாகனங்களில், சுவாமி வீதியுலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை, குண்ணங்குளத்தூர் கிராமவாசிகளும், விழா குழுவினரும் செய்துள்ளனர்.