பதிவு செய்த நாள்
31
மார்
2018
10:03
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்., 17 துவங்கி 29 வரை நடக்கி றது. முக்கிய நிகழ்வாக ஏப்., 27 மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் காலை 9:05 முதல் 9:29க்குள் நடக்கிறது.திருவிழா கொடியேற்றம் ஏப்., 18 காலை 10:05 முதல் 10:29 க்குள் மிதுன லக்னத்தில் நடக்கிறது. கற்பக விருட்சம், சிம்ம வாகனங்களில் அம்மன், சுவாமி எழுந்தருள்வர். ஏப்., 25 இரவு 7:40 முதல் 8:04 க்குள் மீனாட்சி பட்டாபிஷேகமும், ஏப்., 26 திக் விஜயமும் நடக் கிறது. ஏப்., 27 மீனாட்சி திருக்கல்யாணமும், இரவு பூப்பல்லக்கும் நடக்கிறது.ஏப்., 28 அதிகாலை 5:00 மணிக்கு அம்மன், சுவாமி திருத்தேர்கள் புறப்பட்டு நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து நிலை அடையும். ஏப்., 29 தீர்த்தவாரி, தேவேந்திர பூஜையுடன் விழா நிறைவடையும். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.