நிலக்கோட்டை: நிலக்கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா மார்ச் 25ல் துவங்கியது. சிம்ம வாகனம், ரிஷப வாகனத்தில் அம்மன் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சிஅளித்தார். பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, கரும்புத்தொட்டில், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நேற்று முன் தினம் (மார்ச் 28) இரவு அம்மன்பூப்பல்லக்கில் சர்வ அலங்காரத்தில் ஊர்வலமாக வந்து காட்சியளித்தார். நேற்று அம்மன் மஞ்சள் நீராடி முளைப்பாரியுடன் நகர் வலம் வந்தார். இரவுஊஞ்சலாட்டத்துடன் பாவாடை அபிஷேகம் நடந்தது. நாடார் உறவின்முறை மேலாளர் சுசீந்திரன், நிர்வாகிகள் பாண்டியராஜன்,ஜெயபாண்டியன், சுரேஷ்பாபு, கருமலைப்பாண்டியன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.