ராமேஸ்வரத்தில் பத்து ரூபாய் நாணயம் நோ:பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2018 01:04
ராமேஸ்வரம்;ராமேஸ்வரத்தில் பக்தர்களிடம் பத்து ரூபாய் நாணயத்தை வியாபாரிகள் வாங்க மறுப்பதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் கோயிலில் நீராட, பிரசாதம் வாங்கவும், தனியார் ஓட்டல்கள், டீக்கடையில் சாப்பிடும் போது, அதற்கான கட்டணத்திற்கு கைவசமுள்ள பத்து ரூபாய் நாணயத்தையும் சேர்த்து கொடுக்கும் போது, வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர். மேலும் உள்ளூர் மக்கள் கடையில் பத்து ரூபாய் கொடுத்தாலும் வியாபாரிகள் வாங்க மறுத்து விடுகின்றனர். பத்து ரூபாய் நாணயத்தை மாற்றி பொருட்கள் வாங்க முடியாமல், மக்கள் அவதிப்படுகின்றனர். வியாபாரியிடம் கேட்டால்,எங்களிடம் இருந்து பத்து ரூபாய் நாணயத்தை மொத்த வியாபாரியும், வங்கி ஊழியரும் வாங்க மறுப்பதால், பத்து ரூபாய் நாணயத்தை பிறரிடம் வாங்குவதில்லை என தெரிவித்தனர்.