பங்குனி உத்திரம் நிறைவு : தங்கரதப் புறப்பாடு ஆரம்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2018 01:04
பழநி: பங்குனிஉத்திர திருவிழாவை முன்னிட்டு, பழநி மலைக்கோயிலில் ஐந்து நாட்கள் நிறுத்தபட்ட தங்கரதபுறப்பாடு இன்று (ஏப்.,2) முதல் வழக்கம்போல் நடக்கிறது. பங்குனிஉத்திர விழா திருஆவினன்குடிகோயிலில் மார்ச் 24ல் கொடியேற்றத்துடன் துவங்கி பத்துநாள் நடக்கிறது. மார்ச் 29ல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம், மார்ச் 30ல் தேரோட்ட நடந்தது. பத்தாம் நாளான நாள் இன்று இரவு 7:00 மணிக்கு முத்துகுமாரசுவாமி தங்ககுதிரை வாகனத்தில் கிரிவீதியில் திருவுலா வருகிறார். இரவு 11:00 மணிக்கு திருஆவினன்குடியில் கொடியிறக்குதலுடன் விழா நிறைவுபெறுகிறது. இதையடுத்து முத்துகுமாரசுவாமி, வள்ளி,தெய்வானையுடன் பெரியநாயகியம்மன் கோயிலுக்கு புறப்படுகிறார். பங்குனிஉத்திரவிழாவைமுன்னிட்டு, மலைக்கோயிலில் தங்கரதபுறப்பாடு, மார்ச் 28 முதல் ஏப்.,1 வரை நிறுத்தப்பட்டது. மீண்டும் இன்று முதல் வழக்கம்போல் இரவு 7:00 மணிக்கு தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.