Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி ஏழுமலையான் நிதியில் ... பெருமாநல்லூரில் குண்டம் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் திருக்கல்யாண கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2018
01:04

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், திருக்கல்யாண உற்சவம், நேற்று வெகு விமர்சையாக அரங்கேறியது. சென்னை, மயிலாப்பூரில் அமைந்துள்ள, கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி மாதப் பெருவிழா, மார்ச் 22ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின், 10ம் நாளான நேற்று, திருக்கல்யாண வைபவம் நடந்தது. நேற்று காலை, திருக்கூத்த பெருமான் திருக்காட்சி, ஐந்திருமேனிகள் விழா நடந்தது. அதை தொடர்ந்து, தீர்த்தவாரி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, புன்னை மரத்தடியில், உமாதேவியார் மயிலுருவுடன், மாதேவரை வழிபடல் நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து, உற்சவர் கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் திருமண வைபவம் துவங்கியது. இருவரும், சிறப்பு அலங்காரத்துடன் காட்சி அளித்தனர். பின், சனீஸ்வரர் சன்னதி அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், நேற்று மாலை, 5:30 மணிக்கு, தம்பதி சமேதராக காலீஸ்வரர் - கற்பகாம்பாள் எழுந்தருளினர். திருமண சம்பிரதாய சடங்குகள் முடித்த பின், கபாலீஸ்வரர், கற்பகாம்பாளை மணம் புரிந்து, பக்தர்களுக்கு, மணக்கோலத்தில் அருள்பாலித்தார். இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, கைலாய ஊர்த்தி நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, கொடி இறக்கத்துடன் பங்குனி விழா நிறைவு பெற்றது. இன்று, பந்தம் பறி விழா நடக்கிறது. நாளை, விடையாற்றி விழா நடக்கிறது. - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.காரமடையில் ... மேலும்
 
temple news
கோவை; உக்கடம் - சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோட்டில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; சின்னசேலம் அடுத்த அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பூர், அவிநாசி அடுத்த சேவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில் இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணியன் சுவாமி கோவிலுக்கு சொந்தமான, தெய்வானை யானை தாக்கியதில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar