பதிவு செய்த நாள்
03
ஏப்
2018
01:04
பெருமாநல்லுாரில் உள்ள, கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழா, இன்று நடக்கிறது.திருப்பூர் அருகே, பெருமாநல்லுாரில், புகழ் பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குண்டம் திருவிழா, கடந்த மாதம், 28ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பக்தர்களின் வசதிக்காக, ஊராட்சி சார்பில், குடிநீர் வசதி, மொபைல் டாய்லெட்; கோவில் நிர்வாகம் சார்பில், குண்டம் இறங்கும் பக்தர்கள் வரிசையாக வரவும், அம்மனை வரிசையில் நின்று தரிசிக்க ஏதுவாக, தடுப்பு அமைக்கப்பட்டுள்ளன.பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல ஏதுவாக, திருப்பூர், அவிநாசி, குன்னத்துார், நம்பியூர், கோபி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பக்தர்களுக்காக, பல்வேறு அமைப்பினர் சார்பில், நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.