கண்டாச்சிபுரம்: கெடார் அடுத்த சிறுவாலை பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜை நடந்தது. சோமவாரத்தையொட்டி, காலை 11:30 முதல் மூலவர் பாலேஸ்வரருக்கு, லலிதா சகஸ்ரநாமம் அர்ச்சனையும், சிறப்பு அபிஷேகங்களும் நடந்தது. பின்னர் பக்தர்கள் பங்குபெற்ற வாழைப்பூ கலச பூஜைகள், தொடர்ந்து நடைபெற்ற உச்சிகால பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.