ஒரு சமயம் அபூஜஹல் என்பவனும், அவனுடன் ஒரு சிலரும் நபிகளாரிடம் வந்து, “ உமது மார்க்கம் உண்மையான மார்க்கம் என்றால் அமாவாசை இருட்டு வேளையில் வான்மதியை உதிக்கச் செய்து அந்த மதியை இரண்டாகப் பிளந்து காட்டும்,” என்று கூறினார்கள். “நீங்கள் கூறுவது போன்று நான் அல்லாஹ்வின் உதவியால் செய்து காட்டினால் நபி என்று ஒப்புக் கொள்வீர்களா?” என கேட்டபோது, “நிச்சயம் ஒப்புக் கொள்கிறோம்,” என்று பதில் கூறினர். நாயகம் தனது புனித விரலால் அழைத்தவுடனே வான்மதி தோன்றி இரு துண்டாக பிளந்து பார்ப்பவர்கள் முன் காட்சியளித்தது.