பதிவு செய்த நாள்
04
ஏப்
2018
01:04
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி அருகே, வேம்படிதாளத்தில், மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 20ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை, 10:30 மணிக்கு, செல்வ விநாயகர் கோவிலிலிருந்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள், பால்குடம் எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலம் வந்து கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இன்று காலை, தீ மிதித்தல், நாளை மதியம், பொங்கல் வைத்தல் நடக்கவுள்ளது.