பதிவு செய்த நாள்
05
ஏப்
2018
01:04
மேட்டுப்பாளையம்: ஊமப்பாளையத்தில் உள்ள, குண்டத்து காளியாதேவி அம்மன் கோவில் குண்டம் விழா, வரும், 8ம் தேதி நடக்கிறது. மேட்டுப்பாளையம் அடுத்த, ஊமப்பாளையத்தில் குண்டத்து காளியாதேவி அம்மன் கோவில் உள்ளது. இங்கு குண்டம் விழா கடந்த, 24ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 31ம் தேதி ஆடு குண்டம் திறக்கப்படுகிறது. ஏப்., 6ம் தேதி அம்மன் அழைப்பும், 7ம் தேதி ஊமப்பாளையம் விநாயகர் கோவிலிலிருந்து சக்தி கரகங்களும், அக்னி சட்டிகளும் அழைக்கப்படுகின்றன. அன்று இரவு குண்டம் திறப்பும், பக்தர்கள் அலகு குத்தி அழைத்து வருதலும் நடைபெற உள்ளது. 8ம் தேதி காலை, 5:00 மணிக்கு பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், தொடர்ந்து, 6:00 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து அம்மனுக்கும், மகா முனீஸ்வரருக்கும் அக்னி அபிஷேகம் நடைபெற உள்ளது. பின், மஞ்சள் நீராட்டும், மதியம் அன்னதானமும், பொங்கல் வைத்து மாவிளக்கும் எடுக்கப்படுகிறது. 10ம் தேதி மகா அபிஷேகமும், 13ம் தேதி மறுபூஜையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.