Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) கொட்டப்போகுது லாபமோ லாபம்! கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: ( விசாகம் 4, அனுஷம், கேட்டை)ஜாலியா ஊர் சுற்றுவீங்க! விருச்சிகம்: ( விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2018 முதல் 13.4.2019 வரை)
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) தொட்டது எல்லாம் பொன்னாகும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2018
17:24

இன்ப துன்பத்தை சமமாக கருதி வாழும் துலாம் ராசி அன்பர்களே!

ஆண்டு முழுவதும் சனிபகவான் சாதகமாக இருப்பதால் தொட்டது எல்லாம் பொன்னாகும். ஆண்டின் பிற்பகுதியில் பன்மடங்கு நன்மை அதிகரிக்கும். தற்போது உங்கள் ராசியில் குருபகவான் இருப்பது சிறப்பானதல்ல. ஆனால், அவரது அனைத்து பார்வைகளும் சிறப்பாக உள்ளது.  2018 அக்.5ல்விருச்சிக ராசிக்கு மாறிய பின் பணவரவு அதிகரிக்கும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது.  

குரு 2019 பிப்.10ல் 3-ம் இடமான தனுசு ராசிக்கு மாறிய பின் நற்பலன் கொடுக்க முடியாது.

ராகு தற்போது 10-ம் இடமான கடகத்தில் இருப்பதால் பொருள் இழப்பு உண்டாகலாம். 2019 பிப்.13ல் 9-ம் இடமான மிதுனத்திற்கு மாறுகிறார்.

எதிரிகளின் இடையூறு தலை தூக்கும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.

கேது 4-ம் இடமான மகரத்தில்  இருப்பதால் உடல்நலம் பாதிக் கலாம். 2019 பிப்.13ல் 3-ம் இடமான தனுசு ராசிக்கு வருவதால் நன்மை கூடும். தற்போது சனிபகவான் 3-ம் இடத்தில் இருக்கிறார். இது உன்னதமான நிலை. முயற்சி வெற்றி பெறும். தொழிலில் லாபம் கொழிக்கும்.

2018 ஏப்ரல் –  செப்டம்பர் எடுத்த காரியம் வெற்றி பெறும். குடும்பத்தில் சீரான வசதி கிடைக்கும்.

சமூகத்தில் மதிப்பு சுமாராக இருக்கும். எனவே வீண் விவாதங்களை தவிர்க்கவும். குருவின் பார்வை பலத்தால் சுபநிகழ்ச்சி நடந்தேறும். உறவினர் வகையில் அனுகூலமான போக்கு இருக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  

பணியாளர்களுக்கு கடந்த காலத்தை விட வேலைப்பளு அதிகரிக்கும். அதே நேரம் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு திடீர் பணி, இடமாற்றம் ஏற்படலாம்.  பணியிடத்தில் செல்வாக்குக்கு குறைவிருக்காது.

தொழில், வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்கும். யாரையும் நம்பி முக்கிய பொறுப்பு, பணத்தை ஒப்படைக்க வேண்டாம். எதிரி தொல்லை அவ்வப்போது தலை தூக்கலாம். சனி பலத்தால் வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை உண்டாகும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் முயற்சியின் பேரில் கையெழுத்தாகும். எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு  கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள் பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். அனாவசியமாக விஷயங்களில்  ஈடுபட வேண்டாம்.

மாணவர்கள்  குருபகவானின் பார்வையால் கல்வியில் சிறப்பு அடைவர். தேர்வில் நல்ல மதிப்பெண், போட்டியில் வெற்றி உண்டாகும்.

விவசாயத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் அந்த உழைப்புக்கு ஏற்ற பலன் பெறலாம். வழக்கு, விவகாரத்தில் சுமாரான முடிவு கிடைக்கும். பெண்கள் திருப்திகரமான வாழ்வு நடத்துவர். ஆடம்பர செலவை குறைத்துக் கொள்ளவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.

2018 அக்டோபர் – 2019 ஏப்ரல் செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சியில் இருந்த தடைகள் விலகும். பொருளாதார வளம் சிறக்கும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும்.

குருவின் பலத்தால் பணியாளர்கள் மேன்மை காண்பர்.  சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். கோரிக்கைகள்  நிறைவேறும். பதவி உயர்வு வந்து சேரும். விரும்பிய இடமாற்றம் பெறலாம். பிப்.10 க்கு பிறகு வேலைப்பளு இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.   கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். பிப்.13க்கு பிறகு எதிர்பார்த்த பதவி, புகழ் கிடைக்கும்.மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். தேர்வில் மதிப்பெண்கள் அதிகரிக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவர்.

விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும். பிப்.13க்கு பிறகு  புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். சுபநிகழ்ச்சி எளிதில் கைகூடும்.

பரிகாரம்:
* தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு
* வியாழனன்று குருபகவானுக்கு நெய் விளக்கு
* சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை

 
மேலும் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2018 முதல் 13.4.2019 வரை) »
temple
நல்ல எண்ணத்துடன்  செயலாற்றும் மேஷ ராசி அன்பர்களே!

ராசிக்கு 7-ம் இடமான துலாம் ராசியில் குருபகவான் ... மேலும்
 
temple
திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காணும் ரிஷப ராசி அன்பர்களே!

ராகு நன்மை தரும் நிலையில் புத்தாண்டு ... மேலும்
 
temple
உள்ளத்தால் உயர்ந்து நிற்கும் மிதுன ராசி அன்பர்களே!  

குரு சாதகமாக இருக்கும் நிலையில் தமிழ் ... மேலும்
 
temple
பகைவரிடமும் கண்ணியமுடன் நடக்கும் கடக ராசி அன்பர்களே!

ராசிக்கு  4-ம் இடமான துலாம் ராசியில் ... மேலும்
 
temple
நினைத்ததை முடிக்கும் வல்லமை பெற்ற சிம்ம ராசி அன்பர்களே!

கேது சாதகமாக இருக்கும் நிலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.