Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) தொட்டது எல்லாம் பொன்னாகும் துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) பலவீனம் கூட பலமாகும் தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...
முதல் பக்கம் » தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2019 முதல் 13.4.2020 வரை)
விருச்சிகம்: ( விசாகம் 4, அனுஷம், கேட்டை)ஜாலியா ஊர் சுற்றுவீங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2018
17:25

நல்லவர் உதவியுடன் முன்னேறும் விருச்சிக ராசி அன்பர்களே!

புத்தாண்டு கேது சாதகமாக இருக்கும் நிலையில் பிறக்கிறது. மனதில் பக்தி எண்ணம் மேம்படும். குரு பகவான் உங்கள் ராசிக்கு 12ம் இடத்தில் இருக்கிறார். இது சுமாரான நிலையே. அவரால் பொருள் விரயம், வீண் அலைச்சல் ஏற்படலாம். 2018 அக்.5ல் உங்கள் ராசிக்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. ஆனால், குருவின் பார்வை பலத்தால் நன்மை காண்பீர்கள். 2019  பிப்.10ல் 2-ம் இடமான தனுசு ராசிக்கு மாறிய பின் நன்மை அதிகரிக்கும்.

ராகு 9-ம் இடமான கடகத்தில் இருப்பது சிறப்பான இடம் அல்ல. அதனால் செயலில் தடை உருவாகலாம். 2019 பிப்.13ல்  8-ம் இடமான மிதுனத்திற்கு மாறுகிறார். அதன் பின், உறவினர் வகையில் பிரச்னை உருவாகலாம். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும்.

கேது 3-ம் இடமான மகரத்தில் இருந்து நன்மை தந்து கொண்டிரு க்கிறார். ஆரோக்கியம் மேம்படும். 2019 பிப்.13ல் கேது 2-ம் இடமான தனுசு ராசிக்கு வந்த பின், அவரால் நன்மை தர இயலாது. அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது.

சனிபகவான்  2-ம் இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் பிரச்னை
உருவாகலாம். ஆனால், அவரது பார்வை பலத்தால் பொன், பொருள் சேரும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும்.

2018 ஏப்ரல் – செப்டம்பர் கேதுவின் பலத்தால் கடவுளின் கருணை கிடைக்கும்.  வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், சிறப்பாகவும் அமையும். ஆன்மிக ஆன்றோர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும். புதிய வீடு,  -மனை வாங்க யோகம் கூடி வரும்.

குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். இன்பச்சுற்றுலா செல்லவும் வாய்ப்புண்டு.

பணியாளர்கள் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். முயற்சி எடுத்தால் தான் கோரிக்கை நிறைவேறும். சிலருக்கு வேலை மீது வெறுப்பு வரலாம். பணிகாரணமாக  குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.

தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். அரசின் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிரி இடையூறு வரத்தான் செய்யும்.  கலைஞர்கள் பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.

அரசியல்வாதிகள் சீரான முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.  

விவசாயிகள் சிறப்பான பலன் காண்பர். நெல், கோதுமை, பழவகைகள், கடலை பயிர்களில் அதிக வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்கலாம்.

பெண்களுக்கு அடிக்கடி உடல் சோர்வு, வீண் அலைச்சல் ஏற்பட லாம். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பர். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.  வேலையில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். மே மாதத்திற்கு பிறகு வீடு, மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.  

2018 அக்டோபர் – 2019 ஏப்ரல் வசதி வாய்ப்பு பெருகும். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். கணவன், மனைவி இடையே சச்சரவு ஏற்படலாம்.  ஒருவருக்கொருவர் அனுசரித்து விட்டுக் கொடுத்து போகவும்.  குருவின் பார்வையால் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். பிப்.10க்கு பிறகு எதிர்பார்ப்பு நிறைவேறும்.  

பணியாளர்களுக்கு  வேலைப்பளு, அலைச்சல் அதிகரிக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். முக்கிய பொறுப்பை நீங்களே செய்வது நல்லது. சிரத்தை எடுத்தால் கோரிக்கைகள் நிறைவேறும்.  

தொழில், வியாபாரத்தில்  வருமானம் அதிகரிக்கும். எதிரிகளின்  வகையில் எப்போதும் ஒரு கண் இருப்பது நல்லது. கலைஞர்கள்  சிரத்தை எடுத்தே புதிய ஒப்பந்தம் பெற முடியும்.
அரசியல்வாதிகள் நற்பெயரும், புகழும் கிடைக்கப் பெறுவர்.  பிப்.13 க்கு பிறகு எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைப்பதில் தாமதமாகலாம்.

மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது நல்லது. பிப்.10க்கு பிறகு, குரு சாதகமான இடத்தில் இருப்பதால் நல்ல மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி உண்டாகும்.

விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் வருமானத்திற்கு குறை இருக்காது.  நெல், சோளம், கம்பு, கேழ்வரகு ஆகியவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். தனியார் துறையில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவை. குருபகவானின் 9-ம் இடத்து பார்வை மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும்.

பரிகாரம்:
* வியாழனன்று  தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை
* வெள்ளியன்று ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு
* சனிக்கிழமையில் ராமபிரானுக்கு துளசி அர்ச்சனை

 
மேலும் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2019 முதல் 13.4.2020 வரை) »
temple
தமிழ் புத்தாண்டு (விகாரி வருடம்) ஏப்ரல் 14ம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் ... மேலும்
 
temple
தமிழ் புத்தாண்டு (விகாரி வருடம்) ஏப்ரல் 14ம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் ... மேலும்
 
temple
தமிழ் புத்தாண்டு (விகாரி வருடம்) ஏப்ரல் 14ம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் ... மேலும்
 
temple
தமிழ் புத்தாண்டு (விகாரி வருடம்) ஏப்ரல் 14ம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் ... மேலும்
 
temple
தமிழ் புத்தாண்டு (விகாரி வருடம்) ஏப்ரல் 14ம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.