Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்துார் ... சித்திரை அமாவாசை ராமேஸ்வரம் கடலில் நீராடிய பக்தர்கள் சித்திரை அமாவாசை ராமேஸ்வரம் கடலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை காத்திருப்பு அறைகளில் பக்தர்களுக்கு பொங்கலுடன் சட்னி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமலை காத்திருப்பு அறைகளில் பக்தர்களுக்கு பொங்கலுடன் சட்னி

பதிவு செய்த நாள்

16 ஏப்
2018
10:04

திருப்பதி: திருமலையில் பக்தர்கள் காத்திருப்பு அறைகளில், பொங்கல் மற்றும் உப்புமா உள்ளிட்ட சிற்றுண்டிகளுடன், சட்னி வழங்கும் நடைமுறையை, தேவஸ்தானம் துவங்கி உள்ளது.

திருப்பதி, திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, தேவஸ்தானம், 24 மணிநேரமும் அன்னதானம், சிற்றுண்டி, டீ, காபி, பால், மோர் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. காத்திருப்பு அறைகளிலும், பக்தர்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளிலும், அன்னதானம், சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகின்றன. பொங்கல், ரவை, சேமியா உப்புமா உள்ளிட்டவை வழங்கும் போது, அதற்கு இணையாக சட்னியும் வழங்க வேண்டும்’ என, மாதந்தோறும், குறைகேட்பு நிகழ்ச்சியில், பக்தர்கள் தேவஸ்தானத்திடம் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.இதையேற்று, தேவஸ்தான நிர்வாகம், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், பொங்கல் மற்றும் உப்புமா சிற்றுண்டிகளுடன், வேர்கடலை சட்னி வழங்கும் நடைமுறையை துவங்கி உள்ளது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருமலை ஏழுமலையானை தரிசிக்க, வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில், பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.தற்போது, தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை துவங்கியுள்ளதால், தமிழ் புத்தாண்டு முதல் திருமலைக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.அதனால், இதற்கு முன் தர்ம தரிசனத்தில், 3 மணிமுதல், 4 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்து வந்த பக்தர்கள், தற்போது, 15 மணிநேரம் காத்திருக்கின்றனர்.எனவே தேவஸ்தான நிர்வாகம், பக்தர்களின் காத்திருப்பு சிரமத்தை குறைக்க, தர்ம தரிசன பக்தர்களுக்கு, விரைவில், நேர ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த திட்டமிட்டு வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar