திருப்புத்துார்: திருப்புத்துார் திருமுருகன் திருப்பேரவை சார்பில் திருத்தளிநாதர் கோயில் முருகனுக்கு சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு பக்தர்கள் பால் குடம் எடுத்தனர். முன்னதாக காலை பக்தர்கள் கோட்டைக்கருப்பண்ணசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு அங்கிருந்து பக்தர்கள் பால்குடத்துடன் தேரோடும் வீதிகளில் ஊர்வலமாக வந்து திருத்தளிநாதர் கோயில் வந்தனர். தொடர்ந்து முருகனுக்கு பாலாபிஷேகம் நடந்து அலங்கார தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.