பதிவு செய்த நாள்
16
ஏப்
2018
03:04
மோகனூர்: மாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு, சுவாமிக்கு, 108 பால் குடம், 108 சங்காபிஷேகம் மற்றும் பூச்சொரிதல் விழா நடந்தது. மோகனூர் மாரியம்மன் கோவிலில், குண்டம் இறங்கும் விழா கடந்த, 9ல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும், காவிரி ஆற்றுக்கு செல்லும் பக்தர்கள், புனித நீராடி தீர்த்தம் எடுத்து வந்து, கோவில் முன் நடப்பட்டுள்ள, கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டு செல்கின்றனர். நேற்று, அம்மன் அறக்கட்டளை சார்பில், வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, 108 பால்குட அபி?ஷகம், 108 சங்காபி ?ஷகம் மற்றும் பூச்சொரிதல் விழா நடந்தது. காலை, 10:00 மணிக்கு காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள், பால்குடம் எடுத்துக்கொண்டு, ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். மாலை, 6:00 மணிக்கு, பூச்சொரிதல் விழா நடந்தது. வரும், 22ல், வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்படுகிறது. 23ல், தீ குண்டம் இறங்குதல், மாவிளக்கு பூஜை, அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 24ல், பொங்கல் பூஜை, கிடாவெட்டு, கம்பம் பிடுங்கி ஆற்றில் விடுதல், 25ல், மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.