பதிவு செய்த நாள்
16
ஏப்
2018
03:04
சேலம்: சவுந்திரராஜர், சூரியபிரபை வாகனத்தில், திருவீதி உலா வந்தார். சித்திரை பிரம்மோற்சவ விழா, சேலம், அம்மாபேட்டை, சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம், கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, எம்பெருமானார் ஸ்ரீமத் ராமானுஜர், எதிர்சேவையில் முன்னே செல்ல, சவுந்தரராஜர், சர்வ அலங்காரத்தில், சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்தார். தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை, கற்பக விருட்ச வாகனத்தில், தீப அலங்காரத்துடன் சுவாமி திருவீதி வலம் வந்தார். இன்று, இந்திர விமானத்தில் பெருமாள் திருவீதி உலா வருவார்.