யானையின் முன் நெற்றியில் லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம். இதனால், தினமும் நடை திறந்ததும் கோயில் கருவறையின் முன் யானைக்கு பூஜை நடத்துவர். யானையின் பிளிறல் ஓசை கேட்டு லட்சுமியின் மனம் குளிர்வாள். பாற்கடலில் லட்சுமி அவதரித்ததும், பூமியைத் தாங்கும் எட்டுத்திசை யானைகளும் புனித தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்கியதால் ‘கஜலட்சுமி’ என பெயர் பெற்றாள். ‘கஜம்’ என்றால் ‘யானை’. கஜலட்சுமி சிற்பத்தை கோயில் கருவறை மீதும், தலைவாசலிலும் அமைப்பது வழக்கம்.