ஆண்டிபட்டி: வைகை அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால், மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவுக்கு தண்ணீர் திறந்து விடும் வாய்ப்பு உள்ளது.வைகை அணை நீர்மட்டம் ஏப்.10ல் 32 அடியானது. (மொத்த உயரம் 71 அடி). இருப்பில் உள்ள நீரை குடிநீருக்காக சில வாரங்கள் மட்டுமே பயன்படுத்தும் நிலை இருந்தது. மழையால், நீர்வரத்து அதிகரித்த நிலையில் நேற்று 35.11 அடியாக உயர்ந்தது.இதனால் மதுரையின் குடிநீர் தட்டுப்பாடு தற்காலிகமாக நீங்கியதுடன், ஏப். 30 ல் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கும் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.