பதிவு செய்த நாள்
24
ஏப்
2018
10:04
மதுரை: மதுரை மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் ஏப்.,27 ல் திருக்கல்யாண விருந்து நடக்கிறது. பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் தலைவர் விவேகானந்தன் கூறியதாவது: திருக்கல்யாண விருந்து ஏப்.,27 காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை ஒரு லட்சம் பேருக்கு வழங்கப்படும். காலையில் கேசரி, பொங்கல், பூரி, சாம்பார் வழங்கப்படும். அதன் பின்னர் கற்கண்டு சாதம், சர்க்கரை பொங்கல், வடை, சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், உருளை கிழங்கு கறி, பச்சடி, ஊறுகாய், தண்ணீர் பாக்கெட் ஆகியவற்றுடன் பாக்கு தட்டில் வாழை இலை வைத்து வழங்கப்படும்.பரவை, மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் தேவையான காய்கறிகளை லாரியில் அனுப்புகின்றனர். சபை உறுப்பினர்கள், பக்தர்கள் அரிசியும், கீழமாசி வீதி வியாபாரிகள் மளிகை, எண்ணெய் வழங்குகின்றனர். விருந்து பொருட்கள் வழங்க விரும்புவோர் சேதுபதி பள்ளியில் கொடுத்து ரசீது பெறலாம். காய்கறி வெட்டும் சேவையில் இணைய விரும்புவோர் தங்களது வீட்டில் இருந்து அரிவாள்மனை அல்லது கத்தியுடன் வந்து காய்கறிகளை நறுக்கி தரலாம். ஏப்.,26 மாப்பிள்ளை அழைப்பு விருந்து உண்டு. விபரமறிய 94424 08009ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.