பதிவு செய்த நாள்
24
ஏப்
2018
10:04
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில், சித்திரை பிரம்மோற்சவ விழா, நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்திற்காக, நேற்று முன்தினம் மாலை, மூலவர் அருளாசியுடன், வாஸ்து ஹோமம் நடத்தி, சுவாமியின் சேனை முதல்வர் விஷ்வ சேனர், கொடி கயிற்றுடன் வீதியுலா சென்றார். துவக்க நாளான நேற்று காலை, ஸ்தலசயன பெருமாள், தேவியருடன், மகாமண்டபத்தில் எழுந்தருளி, சிறப்பு வழிபாட்டிற்கு பின், 5:25 மணிக்கு கொடியேற்றப்பட்டது. நவசந்தி ஆவாஹணம் நிறைவேறி, சுவாமி, தேவியருடன், வீதியுலா சென்றார். மாலை, கும்ப ஆவாஹணம், யாகசாலை ஹோமம் நடந்தது. இதையடுத்து, சுவாமி, ஊஞ்சல் சேவையாற்றி, மங்களகிரி வேணுகோ பாலன் திருக்கோலத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். மே 2 வரை, தினமும் காலை, இரவு, பல உற்சவங்கள் நடைபெறும். முக்கிய உற்சவங்களாக, 27ம் தேதி இரவு கருடசேவை, 29ல், காலை திருத்தேர் உற்சவம் நடக்கிறது.