பதிவு செய்த நாள்
24
ஏப்
2018
02:04
பெத்தநாயக்கன்பாளையம்: கொட்டவாடி, மகாசக்தி மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு, நேற்று மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. உலக நன்மை பெறவேண்டியும், மழை வளம், செல்வ வளம் பெருகி, குடும்ப சுபிட்சம் பெறவும் நேற்று மாலை, 7:00 மணிக்கு மேல், திருவிளக்கு பூஜை, ஏத்தாப்பூர் சிவாச்சாரியார் ஞானஸ்கந்த குருக்கள் தலைமையில் நடந்தது. விழாவையொட்டி, மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொட்டவாடி, பேளூர் கரடிப்பட்டி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். இன்று காலை, 10:00 மணிக்கு கோவில் வளாகத்தில் ஊரணி பொங்கல் நடக்கவுள்ளது.