பதிவு செய்த நாள்
25
ஏப்
2018
01:04
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், வேதகிரீஸ்வரர் நேற்று,கதலிவிருட்சம் வாகனத்தில் வீதி உலா வந்தார். திருக்கழுக்குன்றத்தில் சித்திரை பெருவிழா, 20ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், ஐந்தாம் நாள் விழாவான நேற்று காலை, 8:00 மணிக்கு, வேதகிரீஸ்வரர் கதலிவிருட்சம் வாகனத்தில் வீதி உலா வந்தார். உடன், திரிபுரசுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோரும், அவரவர் வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு, 10:00 மணிக்கு, வெள்ளி ரிஷபம் மற்றும் மயில் வாகனத்தில் பஞ்சமூர்த்திகளின் வீதி உலா நடந்தது. ஆறாம் நாள் விழாவான இன்று காலை, 8:00 மணிக்கு விமானம் மற்றும் இரவு, 9:00 மணிக்கு யானை வாகனத்தில், வேதகிரீஸ்வரர் வீதி உலாவைபவம் நடைபெறும்.