சாயல்குடி, சாயல்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா நடந்தது. மாலையில் விளக்கு பூஜையும், அம்மனுக்கு மலர்களால் அபிஷேக, ஆராதனையும் நடந்தது. முளைப்பாரிக்கு முன்பு கும்மி, கோலாட்டம், ஓயிலாட்டம் ஆடினர். பெண்கள் பொங்கலிட்டனர். நேற்று மாலை பாரி ஊர்வலம் நடந்தது.ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.