பதிவு செய்த நாள்
28
ஏப்
2018
06:04
* ஏப்ரல் 28, சித்திரை 15, சனி: நரசிம்ம ஜெயந்தி, நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுதல், உமாபதி சிவாச்சாரியார் குருபூஜை, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருநெல்வேலி மாவட்டம் குறுக்குத்துறை சுப்பிரமணியர் தேர், கரிநாள்.
* ஏப்ரல் 29, சித்திரை 16, ஞாயிறு: சித்ரா பவுர்ணமி விரதம், அர்த்தநாரீஸ்வரர் விரதம், சம்பத் கவுரி விரதம், புத்த பூர்ணிமா, நயினார் நோன்பு, இசைஞானியார் குருபூஜை, மதுரகவி ஆழ்வார் திருநட்சத்திரம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் சித்திரை உற்ஸவம், மதுரை தல்லாகுளத்தில் கள்ளழகர் எதிர்சேவை.
* ஏப்ரல் 30, சித்திரை 17, திங்கள்: திருக்குறிப்புத் தொண்டர் குருபூஜை, பெரியதிருமலை நம்பி திருநட்சத்திரம், மதுரை வைகையில் கள்ளழகர் எழுந்தருளல், சென்னை திருவல்லிக் கேணி பார்த்தசாரதி பெருமாள் பரமபதநாதர் திருக்கோலம்.
* மே 1, சித்திரை 18, செவ்வாய்: திருவையாறு ஐயாரப்பர் சப்தஸ்தானம், திருநெல்வேலி அருகன்குளம் எட்டெழுத்துப் பெருமாள் தருமபதி திருக்காட்சி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கருட வாகனம்.
* மே 2, சித்திரை 19, புதன்: சுபமுகூர்த்த நாள், செடி கொடி வைக்க நல்லநாள்,அழகர்கோவில் கள்ளழகர் மோகினி அவதாரம், இரவு பூப்பல்லக்கு, சென்னை சென்னகேசவ பெருமாள் சேஷ வாகனம், தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் எழுந்தருளல்.
* மே 3, சித்திரை 20, வியாழன்: சங்கடஹர சதுர்த்தி விரதம், விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல், சென்னை சென்ன கேசவ பெருமாள் நாச்சியார் திருக்கோலம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மோகினி அவதாரம்.
* மே 4, சித்திரை 21, வெள்ளி: சுபமுகூர்த்த நாள், அக்னி நட்சத்திரம் ஆரம்பம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் சூர்ணாபிஷேகம், ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு, சங்கரன்கோவில் கோமதி அம்மன் தங்கப்பாவாடை தரிசனம், வேலூர் மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கண்ணாடி பல்லக்கு.