பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளியை அடுத்த குஞ்சிபாளையம் பிளேக் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 17 ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 24ம் தேதி நந்தா தீபம் ஏற்றப்பட்டது. தெய்வகுளம் காளியம்மன் கோவிலில் இருந்து, இன்று தீர்த்தம் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அபிேஷகம் செய்யப்படுகிறது. நாளை பூவோடு ஊர்வலம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும், 2ம் தேதி மாவிளக்கு ஊர்வலம், 4ம் தேதி மஞ்சள் நீராடுதல் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாட்டு நடக்கிறது.