தேவிபட்டினம்:தேவிபட்டினம் கழனிக்குடி கூடார செல்லியம்மன் கோயில் சித்திரை பூக்குழி விழா ஏப். 27 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றன. தொடர்ச்சியாக நேற்று காலை விரதமிருந்த பக்தர்கள் நவபாஷாண கடலில் நீராடி பால்குடம், காவடி, அலகு குத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். அதைத் தொடர்ந்து இரவில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்தி கடன் நிறைவேற்றினர்.