புவனகிரி: புவனகிரி ராகவேந்திரா கோவிலில், நேற்று ஏக தின லட்ச்சார்ச்சனை விழா நடந்தது. புவனகிரி ராகவேந்திரா கோவிலில் கும்பாபிஷேகமான நாளில் ஆண்டுதோறும் ஏக தின லட்சார்ச்சனை விழா நடந்து வருகிறது. இந்தாண்டு, நேற்று லட்ச்சார்ச்சனை விழாவை முன்னிட்டு ராகவேந்திரா சுவாமிக்கு, காலை 5 மணிக்கு சுப்ரபாதம், ஸ்தோத்திர பாராயணம், நிர்மால்ய அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து லட்சார்ச் சனை காலை 6:00 மணிக்கு துவங்கி மதியம் 1:00 மணி வரை நடந்தது. 1:10 மணிக்கு தீபாராதனை, பிரசாத விநியோகமும், மாலை 6:00 மணிக்கு இன்னிசை கச்சேரியும், இரவு 8:00 மணிக்கு ரதோற்சவமும் நடந்தது. பூஜைகளை, நரசிம்மாச்சாரியார், ரகு ஆச்சாரியார் செய்தனர். விழாவில், புவனகிரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, ராகவேந்திரர் சுவாமிகள் புனித தொண்டு அறக் கட்டளை நிர்வாகிகள் தலைவர் ராமநாதன், செயலர் உதயசூரியன், பொருளாளர் கதிர்வேலு செய்திருந்தனர்.