சின்னமனுார்:சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக காவல் தெய்வம் விலங்கையா கோயிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடக்க உள்ளன. சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா, ஏப்., 20ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 18 நாட்கள் உபயதாரர்கள் சார்பில் மண்டகப்படி நடந்தது. ஏகச்சப்பரம், அன்னவாகனம், பூதவாகனம் உள்ளிட்டவற்றில் சுவாமி, அம்மன் நகர்வலம் நடந்தது.பூலாநந்தீஸ்வரர் - சிவகாமியம்மன் திருக்கல்யாணம் ஏப்., 27ல் நடந்தது. திருத்தேரோட்டம் ஏப்., 28ல் துவங்கி, ஏப்., 29ல் நிறைவடைந்தது.\ இன்று காலை 11:00 மணிக்கு காவல் தெய்வமான விலங்கையா கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகளுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.