காசியில் வீற்றிருக்கும் விஸ்வநாதராகிய சிவன், “பழம்நீ” என்று அழைத்ததால், முருகன் குடியிருக்கும் தலம் ‘பழம்நீ’(பழநி) என்றானது. ஞானமே வடிவாக பழநிதண்டாயுதபாணி இருப்பதால்,‘ஞானபண்டிதன்’ என போற்றப்படுகிறார். அவரது கையில், ஞானமே தண்டாயுதமாகஇருக்கிறது. தன்னைநாடிவருவோருக்கு செல்வ வாழ்வு தர வேண்டும் என்பதற்காக,அவர் எளிமை மிக்கஆண்டியாக இருக்கிறார். குழந்தைக்குப்பாலனாகவும், இளைஞருக்குக்குமரனாகவும், கலைஞர்களுக்குஆறுமுகராகவும்,வீரர்களுக்கு சேனாதிபதியாகவும், மந்திர உபதேசம் பெற வருவோருக்கு ஞான பண்டிதனாகவும், தம்பதியருக்கு வள்ளிமணாளனாகவும், பற்றற்ற ஞானியருக்கு ஆண்டியாகவும் ஆக ஏழு வகை வடிவங்களில் அருளை வாரி வழங்குகிறார்.