பதிவு செய்த நாள்
10
மே
2018
02:05
அம்மாபேட்டை: அந்தியூர் தாலுகா, குருவரெட்டியூர், இலிப்பிலி கிராமத்திலுள்ள, சொக்கநாச்சியம்மன் கோவிலில் நேற்று குண்டம் திருவிழா நடந்தது. குருவரெட்டியூர், இலிப்பிலி கிராம தேவதையாக உள்ள, சொக்கநாச்சியம்மன் கோவிலில் கடந்த மாதம், 24ல் பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த நிலையில், நேற்று முன்தினம் குருவரெட்டியூர் பஜனை கோவிலிலிருந்து, சொக்கநாச்சியம்மன் கோவில் புறப்படுதல், வீரமக்கள் அபி?ஷகம், குண்டம் கண் திறக்கும் வழிபாடு போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நிகழ்வான, குண்டம் திருவிழா நேற்று காலை, 10:00 மணியளவில் தொடங்கியது. நூற்றுக்கணக்கானோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மை அழைத்தல், முப்போடு, படைக்கலம், மாவிளக்கு எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. அம்மாபேட்டை, குருவரெட்டியூர், அந் தியூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர்.